உள்ளாட்சி தேர்தலை ஒரேடியாக அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க அதிமுக முயற்சி!
உள்ளாட்சி தேர்தலை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: இடைத்தேர்தல் பணிகளில் ஆளும் கட்சியான அதிமுக மும்முரமாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விசயங்களிலும் கவனம் செலுத்துக்கின்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், டிசம்பர் 31க்குள் அத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது. இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தல் விசயத்தையும் கையிலெடுத்து ஆராய்ந்துவரும் அதிமுக அரசு, உள்ளாட்சி தேர்தலை மேலும் 2 மாதங்கள் தள்ளிப்போகவைப்பது குறித்தும் விவாதம் நடத்தியிருக்கிறது.

தமிழக அரசின் ஊரக வளர்ர்ச்சித்துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். என்ன காரணங்களைச் சொல்லி தேர்தலை மேலும் 2 மாதங்கள் தள்ளிவைக்கக்கோருவது என்கிற விவாதங்கள் பேசப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பரில் தேர்தல் நடத்துவதாயின், அதிகபட்சம் டிசம்பர் 1ம் தேதிக்குள் நோட்டிஃபிகேசன் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 19ல் இடைத்தேர்தல் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையான ஆலோசனைகளை நடத்தும். ஆக, 10 நாட்கள் மட்டுமே இருக்கிறது. உள்ளாட்சியில் வார்டுகளை சுழற்சி மற்றும் இடஒதுக்கீடு வகையில் மாற்றியமைத்தல் உள்ளிட்டவைகளை சரி செய்தபிறகே நடத்த முடியும்.
ஏனெனில் உள்ளாட்சி குறித்து திமுக போட்ட வழக்கே அதுதான். ஆனால், இதனை சரிசெய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் 23 தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தபப்டும். அதனால் அந்த சமயத்தில் தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்களை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும். இப்படிப்பட்ட ஆலோசனைகள் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களை முன்னிறுத்தி தேர்தலை தள்ளிவைக்க ஆளும் தரப்பில் திட்டமிடப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications