ஓ மை கடவுளே... ஒரு "தலை"யும் கிடைக்கலையே.. தவிக்குது தடுமாறுது தமிழக காங்கிரஸ்!
சென்னை: தமிழக காங்கிரஸுக்கு இதுவரை இப்படிப்பட்ட ஒரு சோகம் ஏற்பட்டதே இல்லை. ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது கட்சி மேலிடம்.
வேறு வழியே இல்லாவிட்டால் தற்காலித் தலைவரையாவது நியமிப்போம் என்று கூறும் அளவுக்கு போய் விட்டதாம் நிலைமை. தலைவர் பெயராக யாரைப் பரிசீலித்தாலும் ஒரு பத்துப் பதினைந்து தலைவர்களாவது வந்து அதை ஆட்சேபித்தால் பிறகு எப்படித் தலைவரை நியமிக்க முடியும் என்று மேலிடத் தரப்பில் எரிச்சல்படுகிறார்களாம்.

இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போன பிறகு புதிய தலைவரை நியமிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது கட்சி மேலிடம்.
திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், கராத்தே தியாகராஜன், குஷ்பு என பல தரப்பினரும் தலைவர் பதவியைப் பெற தாறுமாறாக முயன்று பார்த்தனர்.
இதில் ஒருவரை ஒருவர் காலை வாரி விடும் வேலையும் சுபமாக நடந்து முடிந்தது. இப்படி ஆளாளுக்கு போட்டுக் குழப்பியதால் தலைவர் நியமனத்தையே ஒத்திவைத்து விட்டதாம் காங்கிரஸ் மேலிடம்.
இதுவரை தலைவர் பதவிக்கு யாரையும் இறுதி செய்ய முடியாமல் இருக்கிறது காங்கிரஸ் மேலிடம். மிகப் பெரிய சோகமாக இதை மற்ற கட்சியினர் கிண்டலாக வர்ணிக்கிறார்கள். ஒரு தலைவரைக் கூடவா காங்கிரஸால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று சிரிக்கிறார்கள்.
தலைவர் என்று யாரும் இல்லாத காரணத்தால் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது யார் கொடியேற்றி வைப்பது என்பதில் பெரும் குழப்பமாகி, கடைசியில் வேட்டி சட்டை கிழியாத அளவுக்கு நல்லபடியாக கொடியேற்றி வைத்து விட்டுக் கலைந்தனர் காங்கிரஸார்.
இந்த நிலையில் தேவைப்பட்டால் தற்காலிகத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான சின்னா ரெட்டி என்பவர் கூறியுள்ளார். தற்போது அந்தத் தற்காலிகத் தலைவர் பதவியைப் பிடிக்கவும் அடிதடி ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications