இந்த ஆண்டும் டாமால் டுமில் அதிகம்.. சென்னையில் அதிக அளவில் காற்றில் கலந்த ஒலி மாசு
தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு வெடித்ததால் காற்றின் ஒலியின் மாசு அதிகரித்துள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிக அளவு பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்றின் ஒலி மாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகரில் காற்று மாசு குறித்து திருவல்லிக்கேணி குடியிருப்புப்பகுதி, பெசன்ட்நகர் குடியிருப்பு பகுதி, நுங்கம்பாக்கம் குடியிருப்பு பகுதி, சவுகார்பேட்டை கலப்புப்பகுதி, தியாகராயநகர் வர்த்தகப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இடங்களில் சல்பர்-டை-ஆக் சைடு மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டள்ள அளவான 80 மைக்ரோ கிராமிற்கு உட்பட்டதாகவே கடந்த 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இருந்தது.
மிதக்கும் துகள்கள் நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை மற்றும் தியாகராயநகர் ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 மைக்ரோ கிராம் அளவை விட இரு நாட்கள் அதிகமாக காணப்பட்டன. கடந்த 29ம் தேதி தீபாவளி அன்று சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் மிதக்கும் துகள்களின் அளவு 100 மைக்ரோ கிராம் அளவை விட அதிகமாக காணப்பட்டது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒலி மாசு மற்றும் காற்று மாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாட பொதுமக்களிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கோரியிருந்தது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டதுடன், 125 டெசிபெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு விதித்திருந்த தடையை கடைபிடிக்கவும் வேண்டியிருந்தது. ஆனாலும், ஒலியின் மாசு இந்த ஆண்டும் அதிகரிக்கவே செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாரியச் சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய ஒரு நாள் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேரமும் காற்று தர ஆய்வு, 6 மணி நேர ஒலி அளவுச் சோதனை செய்து, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசின் அளவை கண்டறிந்து வெளியிடுவது வழக்கம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications