17ம் தேதி திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்: சரத்குமார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 17.11.2013 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கட்சியின் அவைத் தலைவர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டம், திருச்சி கற்பகரட்சகி மஹாலில் (கண்டோன்மெண்ட், கோர்ட் அருகில்) நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், நெல்லையில் மாநாடு உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, மும்பை, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளார்கள்.
பொதுக்குழு ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அரசியல் ஆலோசகர் திருச்சி பன்னீர் செல்வம், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கே.கார்த்திகேயன், புறநகர் மாவட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன், மாநகர மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.எம்.ராஜ் குமார், ஜான்பிரிட்டோ, இப்ராஹிம்ஷா, ஜெயராமன், இளைஞரணிச் செயலாளர் ஜம்புகேஸ்வரன், வர்த்தக அணி செயலாளர் கே.பி. செந்தில்குமார், பொறியாளர் அணிச் செயலாளர் மகேஷ்வரன்.
வர்த்தக அணி துணைச் செயலாளர் டி.முருகன், செல்வராஜ், மாணவரணி செயலாளர் கே.ஷாரூக், மகளிரணி செயலாளர் பி.சாந்தி, வழக்கறிஞர் அணிச் செயலாளர் ரவி, தொழிலாளர் அணி செயலாளர் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரங்கம் சிவகுமார், பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரணிதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்' என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications