மெரினாவில் அமைதியான அழகிரி அலை.. திடீர் பல்டி.. காரணம் என்ன?
அமைதி பேரணிக்கு பின் அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் தனது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.
Recommended Video

சென்னை: அமைதி பேரணிக்கு பின் அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் தனது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். இதற்கு பல காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடந்தி உள்ளனர். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது.
இதற்காக கடந்த ஒரு வாரமாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. ஆனால் அவர் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

பெரிய எதிர்பார்ப்பு
இந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இல்லையென்றால் கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதாவது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேசியது என்ன
ஆனால் மெரினாவில் பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றார். இது தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் 1
அழகிரியின் முதல் எதிர்பார்ப்பு, கிளர்ச்சிதான். கட்சியில் கிளர்ச்சி செய்தால் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை வந்து சந்திக்கவில்லை. ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள் கூட அழகிரியை சந்திக்கவில்லை.

காரணம் 2
அதேபோல் அழகிரி ஆலோசனையிலும் கூட்டம் குறைவாக இருந்தது. தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்திக்க வருகிறார்கள். இன்று கூட அவரது பேரணிக்கு 7 ஆயிரம் பேர் மட்டுமே வந்து இருந்தனர். இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

காரணம் 3
அழகிரி கொஞ்சமும் எதிர்பார்க்காதது கனிமொழியின் நிலைபாடுதான். இன்று அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லை. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அப்போதே அழகிரி கனிமொழி உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

காரணம் 3
இதனால் அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்து திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பின்பும் கூட திமுக தரப்பு அவரை கண்டுகொள்ளவில்லை. ஒருவரும் பேட்டி கூட இதை பற்றி அளிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ












Click it and Unblock the Notifications