ஆலங்குடி வேட்பாளர் மாற்றம்... உற்சாகக் கொண்டாட்டத்திற்கு இடையே திமுக அலுவலகத்திற்கு பூட்டு
புதுக்கோட்டை: ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள திமுக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, கடந்த 13ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக சதீஷ் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அதிமுக குடும்ப பின்னணி கொண்டவரை திமுக வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சதீஷை மாற்ற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி திமுவினர் தொகுதி முழுவதும் பல்வேறு ஊர்களில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஆலங்குடி திமுக வேட்பாளரை மாற்றியது திமுக தலைமை. புதிய வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சிவ.வீ.மெய்யநாதன் அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தொகுதி முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, புதுக்கோட்டை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் கேபிகே தங்கவேல் தரப்பினர் ஆலங்குடியில் உள்ள திமுக அலுவலகத்தை பூட்டினர். மெய்யநாதன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மீண்டும் அப்பகுதியில் வேட்பாளரை மாற்றக் கோரி போராட்டங்கள் நடைபெறும் சூழல் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications