ஜி.கே.வாசனின் புதிய கட்சியை பூமழை தூவி வரவேற்கும் தமிழக கட்சிகள்! கூட்டணி அமைக்க மும்முரம்!!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை உடைத்து ஜி.கே.வாசன் உருவாக்கும் புதிய கட்சி தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கு வித்திடும் வகையில் அமையக் கூடும் எனத் தெரிகிறது.
புதிய கட்சிக்கு தலைமை ஏற்கும் ஜி.கே.வாசனுக்கு அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மூப்பனார் போலவே வாசனும் மற்ற கட்சியினருடன் நன்கு பழகியுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், யாரையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதே இல்லை.

இந்த பண்பு வாசனுக்கு இப்போது கை கொடுத்துள்ளது. வாசனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டால் காங்கிரஸ் வாக்குகளைப் பெற முடியும் என்பது அனைத்துக் கட்சிகளின் வியூகமாக இருக்கிறது.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தான் முதன் முதலில் ஜி.கே. வாசனுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். " உறுதியான முடிவு எடுத்து உத்வேகத்துடன் செயல்படுங்கள்" என்று வாசனை ஊக்கப்படுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
பா.ம.க., ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் வாசனுக்கு வாழ்த்துக்கள் சென்றுள்ளனவாம். திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட நட்பு ரீதியாக வாசனை தொடர்பு கொண்டு புதிய கட்சிக்கு வாழ்த்தியதோடு சில அறிவுரைகளையும் கூறியிருக்கின்றனர்.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களும் ஜி.கே.வாசனின் புதிய கட்சி தொடங்கும் முயற்சியை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இப்படி அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஜி.கே. வாசனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கின்றன.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி ஏற்படுத்த வாசனின் வருகை உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications