நானும் தலைவன் என்ற அகங்காரம் வேண்டும்.. கல்லூரி மாணவர்களிடையே கமல் பரபரப்பு பேச்சு!
நானும் தலைவன் என்ற அகங்காரம் வேண்டும் என மாணவர்களிடையே நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சாய்ராம் கல்லூரியில் கமல் பேச்சு
சென்னை: நானும் தலைவன் என்ற அகங்காரம் வேண்டும் என மாணவர்களிடையே நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் நான் தலைவனாக இங்கு வரவில்லை என்றார்.

நாளைய தலைவர்கள் நீங்கள் என்று மாணவர்களை பார்த்து கூறிய கமல்ஹாசன் நான் தலைவர்களை பார்க்க வந்திருக்கிறேன் என்றார். இளைஞர்களிடம் பேசும் போது தைரியம் அதிகரிக்கிறது என்றார்.
நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறவரவில்லை என்ற அவர் நீங்கள் அனைவரும் வர வேண்டும் என அழைக்க வந்துள்ளேன் என்றார்.
ஒவ்வொரு முறையும் நானும் தலைவன் என்று நினைக்க வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் மாணவர்களிடம் தெரிவித்தார். நானும் தலைவன் என்ற அந்த அகங்காரம் வேண்டும் என்று கல்லூரி மாணவர்களிடையே நடிகர் கமல்ஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications