கும்பிட்ட சாமியெல்லாம் தினகரனை கைவிட்டுருச்சே... மூக்குப் பொடி சித்தர் கூட உதவலையே!

அமாவாசை பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம் என எதுவுமே தினகரனுக்கு கை கொடுக்கவில்லை என்பதுதான் சோகம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: எதிரிகளை வெல்ல யாகம் நடத்தியும், வழக்கில் வெல்ல பூஜை நடத்தியும் தினகரனுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. கடைசியில் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தினகரன்.

    தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும், அதிமுகவையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வென்றுள்ளனர்.

    டிடிவி தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

    ஓபிஎஸ் ஈபிஎஸ் பெரும்பான்மை

    ஓபிஎஸ் ஈபிஎஸ் பெரும்பான்மை

    இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் ராஜ்யசபாவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு 34 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில் டிடிவி தரப்புக்கு 3 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. ராஜ்யசபாவில் ஓஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு 8 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.

    தினகரன் தரப்பு

    தினகரன் தரப்பு

    சட்டசபையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. டிடிவி தினகரன் தரப்புக்கு 20 எம்எல்ஏக்கள் ஆதரவே இருக்கிறது. புதுச்சேரி அதிமுகவில் 4 எம்எல்ஏக்களின் ஆதரவும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கே இருக்கிறது.

    மதுசூதனன் அணி

    மதுசூதனன் அணி

    எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் ஆதரவு மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அணியினருக்கே அதிகமாக இருப்பதால் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    அஇஅதிமுக

    அஇஅதிமுக

    இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் எந்தத் தடையும் இல்லை.

    பெரும்பான்மை உறுப்பினர்கள்

    பெரும்பான்மை உறுப்பினர்கள்

    அதிமுகவுக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவின் அடிப்படையிலேயே உறுதி செய்ய முடியும். எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்ய பொது வாக்கெடுப்பு தேவையில்லை.

    தினகரனுக்கு நோ என்ட்ரி

    தினகரனுக்கு நோ என்ட்ரி

    அதேபோல் கட்சிக் கொடியையும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியே இனி பயன்படுத்த முடியும்.
    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக கடந்த மார்ச் 22ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    கைவிட்ட சாமிகள்

    கைவிட்ட சாமிகள்

    டிடிவி தினகரன் கடந்த ஜூன் மாதம் முதல் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார். அமாவாசையில் பிரத்யங்கிரா தேவிக்கு பூஜையும், தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு யாகமும் நடத்தினார். சமீபத்தில் கூட திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை அமாவாசை தினத்தில் வழிபட்டார்.

    மூக்குப் பொடி சித்தர்

    மூக்குப் பொடி சித்தர்

    இப்படி எத்தனையோ சாமிகளை கும்பிட்டும் ஒரு சாமி கூட தினகரனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரை இரண்டு முறை பார்க்கச் சென்றும் ஒருமுறை கூட அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தினகரனுக்கு அப்போதே தெரிந்திருக்க வேண்டாமா? கட்சியும் சின்னம் கைக்கு கிடைக்காது என்று?

    நுழையவே முடியாது

    நுழையவே முடியாது

    டிடிவி தினகரன் இனி அதிமுக அம்மா அணி என்ற பெயரை உபயோகப்படுத்த முடியாது. அதேபோல அதிமுக அலுவலகத்திற்குள் நுழையவே முடியாது என்பதுதான் சோகம். ஆனாலும் தைரியமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று தைரியமாக பேட்டி தருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+