சொரணையே இல்லையா உங்களுக்கு? வாக்காளர்களை கேட்ட அன்புமணி!

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வாக்காளர்களை சொரணையே இல்லையா என கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வாக்காளர்களை சொரணையே இல்லையா என கேட்டார். மேலும் "சிங்கார மற்றும் எழில்மிகு நகராக சென்னை மாறிவிட்டதா?, மேயராக ஸ்டாலின் செய்தது என்ன? என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் பாமக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் சென்னையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார். மேயராக இருந்தபோது ஸ்டாலின் செய்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது, ஸ்டாலின் மேயராக இருந்த போது சிங்கார சென்னையாக்கப்படும் என்றார்.

என்னதான் செய்தார் ஸ்டாலின்?

என்னதான் செய்தார் ஸ்டாலின்?

ஆனால் அதுபோல் செய்தாரா? அதே போக்குவரத்து நெரிசல், அதே சாக்கடை, அதே கொசு, குடிநீர் தட்டுப்பாடு எதுவும் மாறவில்லை என்றார். ஸ்டாலின் மேயராக இருந்தபோது என்னதான் செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தையும் அன்புமணி ராமதாஸ் நினைவு கூர்ந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சென்னையே தத்தளித்தது.

ஜெயலலிதா வெளியே வரவில்லை

ஜெயலலிதா வெளியே வரவில்லை

மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதா வெளியே வரவே இல்லை.

6 தொகுதிகளில் அதிமுக வெற்றி

6 தொகுதிகளில் அதிமுக வெற்றி

ஆனால் 5 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் வருகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்றார்.

சொரணையே இல்லையா உங்களுக்கு?

ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தீர்கள். சொரணையே இல்லையா உங்களுக்கு என்றும் அவர் வாக்காளர்களை பார்த்து கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+