'அம்மா' உணவகம்.. ஸ்டாலினின் 'நான் முதல்வன்'.. UPSC தேர்வில் சாதித்த மதுரை 'தமிழ் வழி' படித்த மாணவர்!
சென்னை: அம்மா உணவகத்தில் சாப்பிட்டு, முதல்வர் ஸ்டாலினின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உதவித் தொகையுடன் பயிற்சி பெற்று UPSC மெயின் தேர்வில் தாம் தேர்ச்சி பெற்றதாக பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார் தமிழ் வழியில் படித்த மதுரை மாணவர் சங்கரபாண்டிய ராஜ்.
UPSC (யுபிஎஸ்சி) தேர்வை தமிழில் எழுதி அகில இந்திய அளவில் 807-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டி ராஜ். தாம் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றது தொடர்பாக ஊடகங்களுக்கு சங்கரபாண்டி ராஜ் அளித்த பேட்டி: நான் மதுரை பீபி குளத்தில் வசிக்கிறேன். என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை தாலுகாக ரெட்டியபட்டி கிராமம். அங்கு அரசு பள்ளியில்தான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில்தான் படித்தேன்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வியில் பிபிஏ படித்தேன்.
2016-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்வு எழுத முயற்சித்தேன். என் அப்பா, அம்மா இருவரும் டெய்லர்தான். அவர்கள் டெய்லரிங் தொழில் மூலமே வருவாய் ஈட்டி என்னை படிக்கவும் வைத்தனர்.
சென்னைக்கு வந்தது முதல் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது உள்ளிட்ட அனைத்து விதமான வேலைகளையும் செய்தேன். அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஆண்டுக்கு 8 மாதம் வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து 4 மாதங்கள் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிவந்தேன். 7 ஆண்டுகள் தொடர்ந்து சிரமப்பட்டுதான் இந்த யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டோம். தமிழ் வழியில் படித்த எங்களால் வேறு மாநிலத்துக்கு சென்று படிக்கவும் சிரமமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.கஸ்டாலினின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.7,500 மாத உதவித் தொகையுடன் படிக்க முடிந்தது. இந்த உதவித் தொகை கிடைத்ததால் எங்களால் வேகமாகவும் படிக்க முடிந்தது. முதன்மைத் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாடு அரசாங்கம் எங்களுக்கு பயிற்சியும் தந்தது. இவை எங்களுக்கு இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் உந்துதலாக இருந்தது. இவ்வாறு சங்கரபாண்டி ராஜ் தெரிவித்தார்.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவரான சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 23-வது இடமும் தமிழ்நாட்டில் முதலிடமும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications