Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசி ஆட்சியில் அமருவதை ஜெ.வின் ஆன்மா விரும்பவில்லை... கேரளா ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா

சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை ஜெயலலிதாவின் ஆன்மா விரும்பவில்லை என்று கேரள ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வரக் கூடாது என்றும் 30 பேரை பழி வாங்கத் துடிப்பதாகவும் கேரள ஜோதிடர் வேங்கடசர்மா திகில் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரை காக்க வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லாததையும், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை ஆளுநர் உள்பட யாரையும் சசிகலா தரப்பு அனுமதிக்காததையும் கண்ட பொதுமக்களுக்கு அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக நம்புகின்றனர்.

 An Astrologer talks with Jayalalitha's soul

ஜெயலலிதா இயற்கையாக மரணிக்க வில்லை என்றும் அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். மக்கள் சந்தேகிப்பது உண்மை என்பதை நிருபீக்கும் வகையில் சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ஜோதிடர் கூறுகையில், ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் கடந்த 3 மாதங்கள் பேசி வருகிறேன். அவர் மரணம் இயற்கையானது அல்ல.

அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இருப்பார்.

27 பேர் முதல் 30 பேர் வரை பழிவாங்க அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது. சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வருவதற்கு அவரது ஆன்மா விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் முழு ஒளிபரப்பு இன்று இரவு 7.30 மணிக்கு சன் நியூஸில் ஒளிபரப்பாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+