சாதி வெறி பிடித்த கட்சி திமுக.. அன்புமணி ஆவேச பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் நடைபெற்ற மது ஒழிப்பு பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவை சாதி வெறி பிடித்த கட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் தேரடி வீதியில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாரட்டு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் முடிவு செய்து விட்டார்கள் தமிழகத்தில் அடுத்த ஆட்சி பாமக தான். கடலூர் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கு யார் கல்வி தேர்ச்சியில் கடைசி வருவதென்று, ஏனேனில் இந்த இரண்டு மாவட்டத்திலும் மது தான் முதலிடத்தில் உள்ளது.

 Anbumani ramadoss Accusation on DMK

இந்த பகுதியில் தாய் பாலில் டையாக்சின் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு 2000 மடங்கு புற்று நோய் வர வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை கையில் எடுக்கும் ஒரே கட்சி பா.ம.க தான். ஆனால் திமுக சாதி வெறி பிடித்த கட்சியாக இருக்கிறது.

தமிழக மக்கள் 37 அதிமுக எம்.பிக்களை தேர்வு செய்து மிகப் பெரிய தவறை செய்துவிட்டனர். வரும் 29 ம் தேதி எனது தலைமையில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க கோரி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK youth wing leader and Lok Sabha member Dr Anbumani Ramadoss have Accusation on DMK
Please Wait while comments are loading...