முதல்வரா இவர், முதலில் டிஸ்மிஸ் செய்யுங்கள்.. அன்புமணி "அட்டாக்"!
சென்னை: தான் முதல்வர் என்பதை ஓ.பன்னீர் செல்வமே ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை பாமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், பன்னீர்செல்வமே, தான் முதல் அமைச்சர் என்பதை நம்பாமல் இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாகவே கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுப்பதில்லை.
நிலம் கையக்கப்படுத்தும் சட்டத்தை கடுமையாக எதிர்த்த அதிமுக, இப்போது ஆதரவு கொடுக்க என்ன காரணம்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி மரணம் விவகாரத்தில் தமிழக அரசு மீதான நம்பிக்கையை பொதுமக்கள் முற்றிலும் இழந்துள்ளனர். இதனாலேயே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications