குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயில் அம்மன், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தந்தை ச.ஜெயராமனின் குலதெய்வ கோயிலாகவும் இக்கோயில் உள்ளது.

துர்கா ஸ்டாலின்
தனது தந்தை வழி குலதெய்வ கோயில், துர்கா ஸ்டாலின் உதவியுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. மேலும், புதிதாக கோவில் கொடிமரம், விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக யாகசாலை பூஜைகளும் நடைபெற்று வந்தது. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்
இதனையடுத்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. முதல்வர் குடும்பத்தினர், புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோயிலை வலம் வந்தனர்.

கொடியசைத்த துர்கா
பின்னர், துர்கா ஸ்டாலின் கொடியசைக்க, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிச்சை குருக்கள் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில், சிவாச்சாரியார்கள், பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

முதல்வர் குடும்பத்தினர்
இந்த கும்பாபிஷேகத்தில், முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி, நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்ய நாதன், எம்.எல்.ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியத் தலைவர் இரா லலிதா, மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications