நீட்டுக்கு 3வது பலி.. புதுச்சேரிக்கு தேர்வு எழுத சென்ற பண்ருட்டி மாணவி தந்தை நெஞ்சு வலியால் மரணம்!
நீட் தேர்வு எழுத வந்த பண்ருட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

புதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள உயிர்பலி மூன்றாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில் ஏற்பட்ட அதீத மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்பின் காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதேபோல, சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த இரு மரணங்களும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இன்று புதுவையில் உயிரிழந்துள்ளார். நேற்று மகள் சுவாதியை புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத அழைத்து வந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் ,தமிழகத்தின் நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் இந்த ஆண்டு மூன்றாக அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications