போராட்டத்தை தூண்டியதாக வழக்கு: உதயகுமாருக்கு வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன்
நெல்லை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு ஜாமீன் வழங்கி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட சுப.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது, உதயகுமார் இடிந்தகரையில் இருந்ததையடுத்து, அவரது தந்தை இந்த சம்மனை பெற்றுக்கொண்டார்.

ஆனால், உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இன்று (15ஆம் தேதி) வள்ளியூர் நீதிமன்றத்தில் உதயகுமார் ஆஜரானார். இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications