பெரியார் எதிர்ப்பு, புதிய அரசியல் சித்தாந்தம்.. சீமானுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி ஓஹோ பாராட்டு!
சென்னை: தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை எதிர்த்து புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி உள்ளார்; எந்த கட்சியுடனுமே தொடர்பே இல்லாமல் புதிய சித்தாந்தத்தை உருவாக்கிய சீமானுக்கு தமிழ்நாட்டு அரசியலில் தனித்த இடம் உண்டு என்று பாஜக ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி சேனலுக்கு துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு 6%-ல் இருந்து 16% ஆக உயர்ந்துள்ளது. இதனை நிறைய பேர் கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான், பெரியாரை எதிர்த்து பேசினாரா இல்லையா? தமிழ்நாட்டில் பெரியாரை எதிர்த்து கடுமையாக பேசி, இது பெரியார் மண் அல்ல- பெரியாரே மண்ணுதான் என்று கூறியவர் சீமான். அவர் 6%-ல் இருந்து 16% ஓட்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதியில் வாங்கி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பெற்றது மிகப் பெரிய வெற்றி. சீமான் அவருக்கு என ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே ஒரு புதிய அரசியல் சித்தாந்தம் அது. இதுவரை யாருமே செய்ய முடியாத ஒரு காரியம். அதனால் சீமானுக்கு தமிழக அரசியலில் ஒரு தனிடம் இருக்கிறது. சீமான், எந்த ஒரு கட்சியுமே தொடர்பே இல்லாத ஒரு சித்தாந்தத்தை சீமான் பிடித்து வைத்துள்ளார். இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications