இரு விரல்களை இழந்துவிட்டேன்.. காயங்கள் வலிக்கிறது.. 7 பேரையும் விடுவிக்கக் கூடாது.. ஆளுநரிடம் மனு
Recommended Video

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சந்தித்து பாதுகாப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அனுசுயா டெய்ஸி மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேல் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தனு, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தண்டனையை அனுபவித்துவிட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு பிரச்சாரத்துக்கு வந்த போது குண்டுவெடித்ததில் போலீஸ் அதிகாரிகளும் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது ராஜீவ் காந்தி அருகே பாதுகாப்பு அதிகாரியாக காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. அனுசுயா டெய்சி படுகாயம் அடைந்து உயிர் தப்பினார். அவர் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
Anusuya Daisy Ernest a survivor of the bomb blast that killed former PM Rajiv Gandhi says that she is not ready to accept the release of the 7 convicts and met with Governor of the State along with other victim families. pic.twitter.com/utqaTEB5xQ
— Pramod Madhav (@madhavpramod1) September 26, 2018
இவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படுகொலையில் பாதிக்கப்பட்டு நடைப்பிணங்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எண்ண பதில் வைத்துள்ளது தமிழக அரசு என்று தெரிவித்திருந்தார்.
Anusuya speaks after meeting with the Governor. pic.twitter.com/VKLhGW4X3k
— Pramod Madhav (@madhavpramod1) September 26, 2018
இந்த நிலையில் அவர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து அந்த 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த படுகொலையால் நான் எனது இரு விரல்களை இழந்துவிட்டேன்.
[அதிமுக ஆதரவின்றி மத்தியில் யாரும் ஆள முடியாது.. அடித்து சொல்லும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!]
என் மூட்டுகளில் உள்ள தீக்காயங்கள் தினமும் எனக்கு வலியை கொடுக்கிறது. இந்த சூழலில் அவர்களை ஏன் விடுவிக்க வேண்டும். அவர்கள் 7 பேரும் தூக்கில் தொங்கவிடப்படக் கூடியவர்கள் என்றார் டெய்ஸி.












Click it and Unblock the Notifications