இவர்தான் மைத்ரேயன்... புட்டு புட்டு வைக்கும் அடேங்கப்பா அன்வர்ராஜா எம்.பி.
அதிமுகவில் அரண்மனை அரசியல் செய்பவர் எம்.பி. மைத்ரேயன் என விவரிக்கிறார் அன்வர் ராஜா எம்.பி.
Recommended Video

சென்னை: அதிமுகவின் அரண்மை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறவர் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் என மற்றொரு எம்.பியான அன்வர் ராஜா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் மனங்கள் இணையவில்லை என மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கூறியதாவது:

மைத்ரேயன் ஆளுமை
மைத்ரேயன் சார் ஆளுமை மிக்க மனிதர். நான் அதை இல்லை என்று மறுக்கவில்லை. பாரதப் பிரதமரை நேரடியாக அறிந்தவர். எல்லா மேல்மட்ட அரசியல்களையும் உணர்ந்தவர்.. பேலஸ் பாலிட்டிக்ஸ் (அரண்மை அரசியல்) எப்படி செய்வது என்பது அவருக்கு தெரியும்.

குறைகள் தீர்க்கப்படும்
அப்படிப்பட்ட ஒருவருடைய மனக்குறையை தீர்த்து வைக்கக் கூடிய நடவடிக்கையை எங்கள் தலைவர்கள் நிச்சயமாக எடுப்பார்கள். தற்போது நடப்பது அரண்மை அரசியல்தான்.

பிளாட்பார்ம் பாலிடிக்ஸ்
அரசியலில் பேலஸ் பாலிட்டிக்ஸ், பிளாட்பார்ம் பாலிட்டிக்ஸ் இருக்கின்றன. இதில் பேலஸ் பாலிட்டிக்ஸ் என்பது 5 ஆண்டுகள் தொடர்ந்து அரசு நடத்துவதற்கானது; பிளாட்பார்ம் பாலிட்டிக்ஸ் என்பது 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்களை சந்திப்பது.
விரைவில் தீர்வு காண்போம்
தற்போது பிளாட்பார்ம் பாலிட்டிக்ஸுக்கு அவசியம் இல்லை. நடப்பாது பேலஸ் பாலிட்டிக்ஸ்தான்.. (அரண்மனை அரசியல்). இந்த பேலஸ் பாலிட்டிக்ஸில் எல்லாவகையிலும் செல்வாக்கு செலுத்தக் கூடிய மனிதர் மைத்ரேயன் சார். நாங்கள் அவரை சார் என்றுதான் அழைப்போம். அப்படிப்பட்ட மைத்ரேயன் அவர்களுடைய குமுறலை உணர்ந்து எங்கள் தலைவர்கள் பேசி முடிவு எடுத்துவிடுவார்கள்.
இவ்வாறு அன்வர் ராஜா எம்.பி. தெரிவித்தார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications