அரபிக்கடலில் உருவானது 'லூபன்' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[ காவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்! ]

லூபன் என பெயர்
இந்த புயலுக்கு லூபன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. லூபன் புயல் ஓமனில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம்
இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த மண்டலமாக நிலவி வருவதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

புயலாக மாறும்
அடுத்த 2 நாட்களில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில்
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழை, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications