அரக்கோணத்தில்.. யாருங்க இந்த பொண்ணு.. மாப்ளை ரொம்ப பாவம்.. புதுஸா இருக்கே.. அப்படியே அதிரும் நெமிலி
அரக்கோணம்: கடந்த 2 நாட்களாகவே அரக்கோணம் சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி கொண்டிருக்கிறது. தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண், மணமேடையைவிட்டு ஓடிப்போய்விட்டார். இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

மாப்பிள்ளை, கட்டிட மேஸ்திரியாக வேலைபார்க்கிறாராம்.. 3 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.. இந்நிலையில், கடந்த புதன்கிழமை இவர்களுக்கு திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.
மாப்பிள்ளை: இரு வீட்டு பெரியார்களும், திருமணத்துக்கான ஜரூர் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் மணமகள், அரக்கோணம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் திடீரென நுழைந்தார்.
இதனால், போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், "கல்யாணத்தில் தனக்கு விருப்பமில்லை, கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை தன்னுடைய பெற்றோர் நடத்தி வைக்க பார்க்கிறார்கள்" என்று புகார் தந்துள்ளார்.
புகார்: இதனிடையே, கடைசி நேரத்தில் திருமணம் நின்றுவிட்டதால், இரு வீட்டாருமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த மணப்பெண்ணுக்கு 20 வயதாகிறதாம்.. நன்றாக படித்திருக்கிறார்.. சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாராம். இவருக்கு பேசி முடித்த மாப்பிள்ளை, இவரது நெருங்கிய உறவினர் ஆவார்.
திருமணத்துக்கு குடும்பத்தினர் தயாராகி கொண்டிருந்த நேரத்தில், "கடைக்கு போய்விட்டு வருகிறேன்" என்று வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாராம்.. ஆனால், நேரமாகியும் மகள் வீடு வந்து சேராததால், பதறிப்போன பெற்றோர், நெமிலி போலீஸில் புகார் தந்திருக்கிறார்கள்..
பதறிய பெற்றோர்: இந்த புகாரின்பேரில், போலீசாரும் வழக்கு பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.அந்த நேரத்தில்தான், அரக்கோணம் மகளிர் ஸ்டேஷனில், பாதுகாப்பு கேட்டு, அன்றைய தினம் இரவு தஞ்சம் அடைந்திருக்கிறார் மணப்பெண்..
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், "எனது தோழிகள் மாப்பிள்ளை சரியில்லை என்று என்னிடம் சொல்கிறார்கள். எனக்கும் அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. என் தோழிகளுக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. அதனால்தான் வீட்டை வீட்டு வெளியே வந்து விட்டேன்.. என்னுடைய பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்தால் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன்" என்றாராம்.
காப்பகம்: இதையடுத்தே போலீசாரும், மணப்பெண்ணின் பெற்றோரை, ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அப்போதும் சுமூகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.. அந்த பெண்ணும் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். வேண்டுமானால், அரசு காப்பகத்தில் தங்கி கொள்கிறேன் என்று போலீசாரிடம் சொன்னார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் விருப்பத்தின்பேரில், வாலாஜாவில் உள்ள காப்பகத்திற்கு அவரை அனுப்பி வைத்தனர்... தன்னுடைய தோழிகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால், திருமணத்தை நிறுத்தியதுதான், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications