அமித்ஷாவைப் புகழ்வதில், தமிழிசைக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அடேங்கப்பா போட்டி
அமித்ஷாவைப் புகழ்வதில் தமிழிசைக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் போட்டி நடப்பதைப் போல மாறி மாறி புகழ்ந்துள்ளனர்.
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா வருகை குறித்து, தமிழிசை சௌந்தரராஜன், கூறுகையில், அமித்ஷா தமிழகம் வந்ததால் மழை வந்தது என்றும் மழை வந்துள்ளதால், தமிழகத்தில் குளங்கள் நிரம்பும். குளங்கள் நிரம்பினால் நிச்சயமாக தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறியிருந்தார். தமிழிசையின் இந்த பேச்சு நெட்டிசன்களால் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமித்ஷா வந்ததால்தான் தமிழகத்தில் மழைவந்தது என்ற அமித்ஷாவைப் புகழ்ந்த தமிழிசையின் பேச்சுடன் போட்டிபோடும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அமித்ஷாவைப் புகழ்ந்து டிவிட் செய்துள்ளார்.
அமித்ஷாவின் வருகை குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
"விளக்கின் ஒளி வரும்போது இருள் பயப்படத்தான் செய்யும்..
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) July 10, 2018
அமீத்ஷா என்னும் ஒளி வடிவில் தர்மத்தின் ஆட்சி தமிழகத்தில் வருவதை இருண்ட ஆட்சியை தந்த திமுக எதிர்க்கத்தான் செய்யும்...
தமிழ்நாட்டில் இனி இருண்ட ஆட்சிக்கு இடமே இல்லை " pic.twitter.com/9HFkBetUBO
விளக்கின் ஒளி வரும்போது இருள் பயப்படத்தான் செய்யும் என்றும், அமித்ஷா என்னும் ஒளி வடிவில் தர்மத்தின் ஆட்சி தமிழகத்தில் வருவதை இருண்ட ஆட்சியை தந்த திமுக எதிர்க்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இனி இருண்ட ஆட்சிக்கு இடமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவைப் புகழ்வதில் பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு போட்டி நடப்பது போல உள்ளது துலக்கமாகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications