சுனில் + மிதுன்..எடப்பாடியின் மகன் ஆட்டம் அதிரடி.. திமுக சுதாரிக்குமா? டெல்லியில் "கை" வெச்சிட்டாங்க
சென்னை: இப்போதைக்கு தமிழகத்திலேயே திமுக கூட்டணி மட்டுமே பலமாக இருப்பதாக கருதப்பட்டு வருகிறது.. ஆனால், போகிற போக்கை பார்த்தால், இதிலும் டமாரென்று விரிசல் வந்துவிடும்போல தெரிகிறது. இதுகுறித்த பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2 வருட காலமாகவே, ஆளும் கட்சி மீது தமிழக காங்கிரசுக்கு நிறைய அதிருப்திகள் நிலவியபடியே உள்ளது.. அதனால்தான், சிலசமயங்களில் கேஎஸ் அழகிரி, "சுளீரென" திமுக அரசு குறித்து காட்டமான கருத்தை வெளியிட நேர்ந்தது.

கூட்டணி: ஒருகட்டத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் தமிழக காங்கிரஸ் ஆர்வம் கொண்டதாக தெரிகிறது.. அதற்கேற்றவாறு, அழகிரி பேட்டி தரும்போதெல்லாம், 'காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி சாத்தியமாகாது' என்று பஞ்ச் வைத்து பேசினார்.. ஒருவேளை இதெல்லாம் கூட்டணி பேரமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் வலுத்தது.
ஆனால், பாஜகவை கூட்டணியிலிருந்து அதிமுக கழட்டிவிட்டதுமே, இந்த சந்தேகம் ஊர்ஜிதமானது.. திமுக கூட்டணியை உடைத்து, அங்கிருக்கும் சில கட்சிகளை, தன்வசம் கொண்டுவர அதிமுக தரப்பு முயன்றதாக தெரிகிறது. இதற்காக, தமிழக காங்கிரஸிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறது.. 20 சீட்வரை தருவதாகவும் காங்கிரசுக்கு அதிமுக உறுதி தந்ததாகவும் சொல்கிறார்கள். எனவே தமிழக காங்கிரஸ் தரப்பு, ராகுலிடமும் இதை பற்றி சொல்லி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: அதற்கு ராகுல், திமுகவுடன் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, எந்தவிதமான நெருடல் போக்கும் இல்லாதபோது, எதுக்காக அதிமுக கூட்டணி பற்றி பேசுகிறீர்கள்? என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம். அதேபோல, எடப்பாடி பழனிசாமி தரப்பும், ராகுலிடம் கூட்டணி விஷயத்துக்கு முயன்றுள்ளது. திமுகவிடம் முரண்பட்டால் மட்டுமே கூட்டணி மாற்றம் குறித்து மறுபரிசீலனை செய்ய முடியும் என்கிற ரீதியில் எடப்பாடிக்கு ராகுல் தரப்பில் இருந்து பதில் தரப்பட்டுவிட்டதாம்.
ஆக, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில், திடீர் புயல் ஒன்று வீசத்தொடங்கி உள்ளது..
15 தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த முறை 15 தொகுதிகள் கேட்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாம்.. அனைத்து மாவட்ட தலைவர்களும் ஒருமித்த குரலில் இதனை அழகிரியிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.. இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட்டதற்கும், 15 சீட் கேட்கும் கோரிக்கைக்கும், சில பின்னணி காரணம் இருக்கிறதாம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சிலர், "டெல்லி தலைமையிடமிருந்து தலைவர் அழகிரிக்கு சமீபத்தில் ஒரு உத்தரவு வந்தது. அதாவது, மாவட்ட தலைவர்களின் கூட்டத்தை கூட்டுங்கள். அதில், திமுகவிடம் இந்த முறை 15 சீட் வாங்க வேண்டும், சிட்டிங் தொகுதிகளில் மாற்றம் இருக்கக்கூடாது, கூடுதலாக 5 சீட்டுகள் ஒதுக்க வேண்டும். ஆக மொத்தம் 15 சீட்டுகள் திமுகவிடம் வாங்க வேண்டும்" என மாவட்ட தலைவர்கள் வலியுறுத்த வேண்டும், அதன் முடிவுகளை தலைமைக்கு அனுப்பி வையுங்கள் என உத்தரவிடப்பட்டது.
அழகிரி: அதனடிப்படையில்தான் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார் அழகிரி.. (தலைமையின் உத்தரவின்படி கூட்டப்பட்டதால் சீனியர் லீடர்கள் பலரையும் அழகிரி அழைக்கவில்லை) தலைமை உத்தரவிட்டதை மாவட்ட தலைவர்களுக்கு பாஸ் செய்யப்பட்டதால், மாவட்ட தலைவர்களும் அப்படியே வலியுறுத்தியிருக்கிறார்கள்..
திமுகவிடம் சீட் ஷேரிங் பேசும்போது, மாவட்ட தலைவர் களின் கோரிக்கையை சுட்டிக்காட்டி தலைமை விவாதிக்கும். இந்த முறை, காங்கிரசுக்கு மிக குறைவான சிங்கிள் டிஜிட்டிலேயே சீட்டுகளை ஒதுக்க திமுக தலைமையின் முடிவு. அதனால், 15 என ஆரம்பித்தால்தான் கடைசியில் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 10 இடங்களாவது கிடைக்கும் என்கிற யோசனையில் தான் காங்கிரஸ் தலைமை இப்படி திட்டமிட்டது. ஆக, எங்கள் கட்சியின் மேலிடத்தின் உத்தரவின்படிதான் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது’’ என்று நம்மிடம் கிசுகிசுக்கிறார்கள் மாவட்ட தலைவர்கள்.
ராகுல் காந்தி: இது ஒருபுறமிருக்க, அதிமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் வந்தால் 15 சீட்டுகள் ஒதுக்குகிறோம் என்று சமீபத்தில் ராகுல்காந்திக்கு தகவல் அனுப்பியிருந்தார் எடப்பாடி பழனிச் சாமி. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மூலமாகவே இந்த தகவல் பாஸ் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் சாதகமான பதிலை, மேலிட காங்கிரஸ் தரவில்லை.
இந்த நிலையில், காங்கிரசின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனிலும், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் வழியாக காங்கிரசை திமுக கூட்டணியை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்கிறார்கள்.. இத்தகைய பின்னணிகளுடன் தான் திமுகவிடம் 15 சீட் கோரிக்கையை கையிலெடுத்துள்ளது காங்கிரஸ் மேலிட தலைமை என்கிறார்கள் சீனியர் லீடர்கள்.
சுனில் + மிதுன்: ஒருவேளை 15 சீட்களை திமுக ஒதுக்காவிட்டால், காங்கிரஸ் என்ன செய்யும்??? அல்லது 10 சீட்டுக்கும் குறைவாகவே சீட்களை ஒதுக்கினால் தமிழக காங்கிரஸ் என்ன செய்யும்??? தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்!!!
சுனில் + மிதுன்: ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான மருது அழகுராஜ், இதுகுறித்து பலமுறை தன்னுடைய பேட்டிகளில் சொல்லி உள்ளார்.. "எடப்பாடிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் சுனில் என்பவர்தான்.. அந்த சுனில்தான், அகில இந்திய காங்கிரசில் ஒரு பிரதான பிரமுகர் ஆகிவிட்டார்.. அந்த சுனிலும், எடப்பாடி மகன் மிதுனும் நெருங்கிய மகன்கள்..
காங்கிரஸ் கட்சி தென்மாநிலங்களில், பாஜகவுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாது என்று நினைக்கிறது.. வடமாநிலங்களில் விழுந்துள்ள சரிவை தென்மாநிலங்களில் பெற பாஜக முனைக்கிறது.. இந்த வெற்றியை தடுக்க காங்கிரஸ் தடுக்க நினைக்கிறது. சசிகலா அங்குள்ள சுனிலும், இங்குள்ள மிதுனும் நட்பாக இருக்கக்கூடிய சூழலில், பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை தடுப்பதற்காக, தன் வெற்றியை தானே உடைத்துக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று கூறியிருந்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் என்பதால், இந்த தகவல் அப்போது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், மீண்டும் இதே பேச்சு அரசியல் களத்தில் எதிரொலிக்க துவங்கி உள்ளது மறுபடியும் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது.
-
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications