தொடரும் வருமான வரிச் சோதனை... அருப்புக்கோட்டையில் 4ம் நாளாக அதிகாரிகள் ஆய்வு
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகத்தில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
விருதுநகர்: சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகத்தில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு இது வருமான வரிச்சோதனை காலம் என்று கூட கூறலாம். கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து, தற்போது எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

இதுவரை 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 180 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவரின் குடும்ப நிறுவனமான எஸ்பிகே என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் செய்த சில பணிகளில், முறைகேடுகள் செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்த இந்த சோதனை நடக்கிறது.
இன்று செய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதில் இன்னும் சில முக்கியமான ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications