அமைதியான தேசபக்தி.. முரட்டு தேசியவாதத்தை நிச்சயம் வீழ்த்தும்.. ப.சிதம்பரம் டிவீட்

இன்றைய தேர்தல் முடிவு குறித்து ப சிதம்பரம் ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை வெல்லவே முடியாது என்று நினைக்காதீர்கள். அக்கட்சியையும் வெல்லலாம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். அங்கிருந்தபடியே அவரது அனுமதியுடன் அவரது குடும்பத்தினர் அவருக்காக டிவீட்களை போட்டுக் கொண்டுள்ளனர்.

assembly election results 2019: p chidambaram tweet about election result

இன்று சட்டசபை வாக்கு எண்ணிக்கை தினம். மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதுகுறித்து டிவீட் போட்டுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம்.

ஒரு டிவீட்டில், "பாஜகவை தேர்தலில் வெல்லமுடியாது என்று காங்கிரஸார் நினைக்கக் கூடாது. வெல்ல முடியும் என்று நினைக்க வேண்டும். அமைதியான தேசபக்தியால், முரட்டுத்தனமான தேசியவாதத்தை நிச்சயம் வீழ்த்த முடியும்" என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

அதேபோல இன்னொரு டிவீட்டில், "மக்கள் பயத்தை மட்டும் விட்டு விட்டால் போதும், அற்புதங்களை நிகழ்த்த முடியும்" என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம். என்ன மாதிரியான அற்புதம் என்பதை அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+