சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு… சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ளதால் அசம்பாவிதம் ஏதுவும் நடந்துவிடாமல் இருக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளி வர உள்ளதால் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது.

தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகரான சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் கூவத்துரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications