பி.எச்டி. பட்டம் பெறாத உதவி பேராசிரியர்களை நீக்க நடவடிக்கை - துணைவேந்தர் வார்னிங்
நெல்லை: பி.எச்டி பட்டம் பெறாத உதவி பேராசிரியர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் கூறுகையில், நெல்லை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 73 கல்லூரிகளில் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் தகுதிகள், ஆய்வக வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு பல்கலை மானிய குழு, பல்கலைக்கழக விதிப்படி இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த புள்ளி விவரங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும். ஒரு சில கல்லூரிகளில் குறைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் அதை களைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரிகளில் எம்.பில். பட்டம் படித்த பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி கல்லூரி பேராசிரியர் பணிக்கு நெட், ஸ்லேட் அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக வெகு விரைவில் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்கள் இந்த கல்வி தகுதியை பெற வேண்டும்.
நெல்லை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 22 பேர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் இந்த உத்தரவு பொருத்தும். இவ்வாறு தகுதி பெறாத பேராசிரியர்கள் நீக்கப்படுவர். சில பாடங்களுக்கு பேராசிரியர்கள் கிடைப்பது அரிது. அந்த பாடங்களுக்கு மட்டும் பேராசிரியர்கலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications