5 ஆண்டுகள், வெறும் 60 ரூபாய் சம்பளம், ஆனால், ரூ. 66 கோடிக்கு சொத்துக்கள்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக 21.6.96ம் ஆண்டில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபியாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கு ஏழு அட்டவணைகளை மையமாகக் கொண்டே நடத்தப்பட்டது. இந்த அட்டவணையின் விவரப் பட்டியல் ஒவ்வொன்றும் பல பக்கங்களை உள்ளடக்கியது. இந்த ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் 13 பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த 7 அட்டவணைகள்...
1.7.1991க்கு முன்பு ஜெயலலிதாவின் சொத்துக்கள் ரூ. 2,01,83,956.53
30.04.1996க்குப் பின்பு ரூ. 66,44,73,573.27
1.07.1991 முதல் 30.04.1996 கால கட்டத்தில் வருமானம் 9,34,26,053.56
1.07.1991 முதல் 30.04.96 காலத்தில் செலவுகள் ரூ.11,56,56,833.41
1.07.91 முதல் 30.04.1996 காலத்தில் வாங்கிய சொத்துக்கள் ரூ. 64,42,89,616.74
1.07.91 முதல் 30.04.1996 காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ரூ. 2,22,30,779.85
கணக்கில் வராத மதிப்பு ரூ. 66,65,20,396.59

கர்நாடகத்திற்கு மாறிய வழக்கு:
2001 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெங்களூரிலும் பல நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.

அசத்திய ஆச்சார்யா:
சோமசுந்தரம், வெங்கட்ராமன், ஜவஹர் (1997-2005), சந்திரசேகர் (2001-2005) என அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஆஜரானாலும் 2005-2011 ஆண்டு காலத்தில் ஆச்சார்யாவும் சந்தேஷ் சவுடாவும் தான் ஜெயலலிதா தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்த 78 வயதான பி.வி.ஆச்சார்யா, கர்நாடக அரசினால் அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று; அட்வகேட் ஜெனரல் பதவியையும், அதே நேரத்தில் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். அவர் திடீரென்று அட்வகேட் ஜெனரல் பதவியையே ராஜினாமா செய்தார். இதற்கு அப்போதய பாஜக அரசுதான் காரணம் என்று கூறப்பட்டது.

பவானிசிங், முருகேஷ் மராடி:
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங், முருகேஷ் மராடி (2011-2014) நியமிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா வழக்கறிஞர்கள்
முதல்வர் ஜெயலலிதா தரப்பில் 1997 முதல் 2000 வரை விருதாச்சல ரெட்டியார் குழுவினர் ஆஜரானார்கள். 2000 முதல் வழக்கு பெங்களூருவிற்கு மாற்றப்பட்டபோதும் 2007 வரை ஜோதி குழுவினர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகினர். தொடர்ந்து 2007 முதல் 2010 வரை நவநீத கிருஷ்ணன் குழுவினர் ஜெயலலிதாவிற்கு ஆஜராகினர்

2011 முதல்… குமார் குழுவினர்கள்
வழக்கு விறுவிறுப்பு அடைந்த கால கட்டமான 2011ல் தற்போது வரை குமார் குழுவினர்களான செந்தில், மணிசங்கர், பன்னீர்செல்வம், அசோகன், பரணிதரன், அன்புக்கரசு, ராஜன், தனஞ்செயன் ஆகியோர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளனர்.

தி.மு.க வழக்கறிஞர்கள்
2001-2004 வரை சண்முகசுந்தரம் என்ற வழக்கறிஞரும், 2004 முதல் 2006 வரை சோமசேகர் 2004-2006 என்ற வழக்கறிஞரும் ஆஜராகினர். 2010 முதல் தற்போது வரை செல்வகணபதி, தாமரைச்செல்வன், குமரேசன், சரவணன், நடேஷன், பாலாஜி, ராமசாமி ஆகிய வழக்கறிஞர்கள் திமுக சார்பில் ஆஜராகியுள்ளனர்

18 ஆண்டுகள் இழுத்தடிப்பு, 14 நீதிபதிகள் விசாரிப்பு:
இந்த வழக்கு தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை இதுவரை 14 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். அவர்களது விவரம்:
சம்மந்தம் (5.5.1997 முதல் 31.3.2000 வரை) இவ்வழக்கின் முதல் நீதிபதி. இவர் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சென்னையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்:
நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் (2.4.2000 முதல் 30.4.2002 வரை)
நீதிபதி அன்பழகன் (2.5.2002 முதல் 31.7.2002 வரை) பொறுப்பு
நீதிபதி ராஜமாணிக்கம் (1.8.2002 முதல் 31.1.2004 வரை)
நீதிபதி மதிவாணன் (2.2.2004 முதல் 30.4.2004 வரை) பொறுப்பு

பெங்களூர் நீதிமன்ற நீதிபதிகள்:
பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை இதுவரை விசாரித்த நீதிபதிகள்,
நீதிபதி பச்சப்புரே (15.9.2004 முதல் 17.1.2006 வரை)
சொத்துக் குவிப்பு வழக்குடன் லண்டன் ஓட்டல் வழக்கும் இணைக்கப்பட்டது. '6 மாதமாக நீதிமன்றத்தை நடத்த முடியாமல் சிறையில் இருப்பதைப்போல உணர்கிறேன்' என்று சொன்னார் இவர்.
நீதிபதி கிருஷ்ணப்பா (18.1.2006 முதல் 22.2.2006 வரை) பொறுப்பு
நீதிபதி மனோலி (23.3.2006 முதல் 31.5.2009 வரை)
நீதிபதி ஆன்டின் (1.6.2009 முதல் 4.8.2009 வரை) பொறுப்பு

ஜெயலலிதாவை வரவைத்த மல்லிகார்ஜுனையா:
நீதிபதி மல்லிகார்ஜுனையா இந்த வழக்கை விசாரித்தபோது தான் இவ்வழக்கில் ஒரு முறைகூட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத ஜெயலலிதாவை 4 நாட்கள் பெங்களூர் வந்து 313 விதிப்படி தன்னிலை விளக்கம் கொடுக்க வைத்தவர். இவர் 5.8.2009 முதல் 31.8.20012 வரை நீதிபதியாக இருந்தார்.
தொடர்ந்து 1.9.2012 முதல் 15.9.2012 வரை பொறுப்பு நீதிபதியாக சோமராசு நியமிக்கப்பட்டார்.
நீதிபதி பாலகிருஷ்ணாவும் (16..9.2012 முதல் 30.9.2013 வரை) அடுத்து இந்த வழக்கை கையாண்டார்.

சுறுசுறுப்படைந்த வழக்கு
பெங்களூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் 7வது நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். 2013 அக்டோபர் 2ம் தேதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்த முடிகவுடர், ‘‘இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்தது என்று எனக்கு ஆட்பேசணை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கின் குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் ஆஜராக வேண்டும் என்று டெரர் கிளப்பினார். 7.11.2013 வரை அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

ஜான் மைக்கேல் டி.குன்ஹா (31.10.2013 தீர்ப்பு வரை)
அடுத்து வந்தவர் தான் ஜான் மைக்கேல் டி.குன்ஹா. பல நீதிபதிகளையும் அரசு வழக்கறிஞர்களை மனு மேல் மனு போட்டு டயர்ட் ஆக வைத்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பை சட்டத்தின் முன் கட்டிப் போட்ட நீதிபதி குன்ஹா தான்.
மிக நேர்மையாக இந்த வழக்கைக் கையாண்ட இவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஜெயலலிதா தரப்புக்கு உணர்த்தியவர். வழக்கை இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பு செய்த முயற்சிகளையெல்லாம் சட்டப்படி கையாண்டு முடிவுக்குக் கொண்டு வந்து படபடவென அடுத்த கட்டத்துக்கு வழக்கைக் கொண்டு சென்று, 18 ஆண்டுகள் இழுக்கப்பட்ட இந்த வழக்கை தீர்ப்பு நாளை நோக்கி திருப்பி, அதிர வைத்தவர்.

விஜிலென்ஸ் குன்ஹா:
31.10.2013ம் தேதி இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் 8வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். அன்று முதல் ஜெட் வேகமெடுத்த வழக்கு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்புக்காக காத்திருக்கிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications