பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக்பாண்டிக்கு 15 நாள் நீதிமன்ற சிறை... போலீஸ் காவல் நிராகரிப்பு
மதுரை : மும்பையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி நிராகரித்து விட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி. இவர் மீது மதுரை, அவனியாபுரம், கீரைத்துரை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உள்பட பல காவல்நிலையங்களில் கொலை, மிரட்டல் மோசடி உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஜனவரி 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என 17 பேர் சேர்க்கப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட அவர் தலைமறைவானார். போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சுமார் இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி, மும்பையில் திங்கள்கிழமை மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. இன்று (செவ்வாய்) காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் இன்று மதுரை ஜூடிஷியல் மேஜிஸ்ட்ரேட் 2 வது எண் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிராஜா முன்பு மாலை 6 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசார் மனு அளித்தனர். ஆனால் நீதிபதி பாரதிராஜா, அட்டாக்பாண்டியை அக்டோபர் 6 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications