கோவையில் கமல், ரஜினி உருவபொம்மையை எரிக்க முயற்சி: பாரத் சேனாவினர் கைது
கோவை: வெள்ள நிவாரணநிதி வழங்காத நடிகர் கமல்ஹாசனை கண்டித்தும், அதிக அளவில் வெள்ள நிவாரணம் வழங்காத நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராகவும் கோவையில் பாரத்சேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி, கமல் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
வருண பகவானின் கூடுதல் கருணையால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் கொட்டி தீர்த்துவிட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஓடி ஓடி உதவி வருகின்றனர்.

ஜன்னல் வழியே வேடிக்கை
சென்னை மக்கள் வெள்ளத்தில் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பதாக அறிக்கை விட்டார் கமல். அரசையும் குற்றம் சொன்னார். இதற்கு ஓடோடு வந்து ஓ.பி.எஸ் பதில் சொன்னார்.

ஆதரவும் எதிர்ப்பும்
கமலின் கருத்துக்கும், ஓ.பி.எஸ் கருத்துக்கும் எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க பல நட்சத்திரங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகவே உதவி செய்தனர்.

ரஜினியின் ரூ. 10 லட்சம்
நடிகர் ரஜினிகாந்த் ரூ. 10 லட்சம் வெள்ள நிவாரணம் அளிப்பதாக அறிவித்தார். அடுத்த நிமிடமே ராம்கோபால் வர்மா, இதற்கு ரஜினி சும்மாவே இருக்கலாமே என்று பதிவிட்டார்.

பாரத் சேனா போராட்டம்
இது ஒருபுறம் இருக்க தமிழ் திரைப்பட நடிகர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிதி உதவி செய்யவில்லை என்று கூறி, கோவை சங்கனூர் பகுதியில் பாரத் சேனா அமைப்பினர் என பாரத் சேனாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவ பொம்மை
வடக்கு மாவட்ட செயலாளர் சி.டி சேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரின் உருபொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications