ஜெ. தரப்பு என்னை மிரட்டியது இதற்காகத்தான்... பி.வி.ஆச்சார்யா
குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்த ஜெயலலிதாவை நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தினேன். அவர் எழுத்து மூலமாக அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 313வது பிரிவின்படி குற்றவாளி நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நான் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினேன். ஜெயலலிதா தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி எழுத்து மூலமாக கொடுப்பதாகக் கூறினர். நான் ஏற்கவில்லை.
பின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பதிலளிப்பதாக கூறினார்கள். அதையும் நான் ஏற்காமல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறினேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அப்போது தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த மல்லிகார்ஜுனைய்யா, குற்றவாளிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு விஷயங்களை மாநில அரசு கவனிக்கும் என்று கூறி, அரசு வழக்கறிஞருக்கு உதவும் வகையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதா இரண்டு நாள் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனிடையே மீண்டும் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் இரண்டு நாள் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
இதன் காரணமாக என் மீது கோபம் அதிகரித்தது, ஜெயலலிதா தரப்பினரிடமிருந்து எனக்கு பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வந்தன. இதுதவிர அப்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசிடமிருந்தும் அதிக நெருக்கடிகள் வந்தது. அதை பார்க்கும்போது ஆட்சியாளர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இருப்பினும் தொடர்ந்து நான் வழக்கில் வாதாடி வந்தேன்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!











Click it and Unblock the Notifications