உச்சநீதிமன்றத்தின் தடை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்: திருமாவளவன்
உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போல ஆகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: நீட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்குத் தடை என உச்சநீதிமன்றம் கூறுவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அனிதா மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் 7 நாட்களாக பல்வேறு போரட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் தடை குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, ''மக்களின் பிரச்சனைகளுக்காக ஜனநாயகரீதியில் போராடி வருகிறோம். அதற்கு தடை விதித்துள்ளது விந்தையாக உள்ளது.
மாணவர்கள் போராட்ட்டதில் ஈடுபட்டு வருவதை குலைக்கும் செயல் இது. இது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படை உரிமையை மறுதலிப்பது ஆகும். ஆனால், இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மறுபரிசீலனைக்குட்பட்டது. தீர்ப்பை 15ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்கள். தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தான் தெரிவித்துள்ளது.
வீட்டுக்குள் போராடி வரும் சபரிமாலாவை போலீசார் போராடக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். தற்போது நடப்பது வெள்ளைக்கார ஆட்சியில் நடந்த கொடுமையை விட மேலாக இருக்கிறது. அறிவித்தபடி, தடையை மீறியும் போராட்டம் நடத்துவோம்.''- இவ்வாறு தொ. திருமாவளவன் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications