For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீன்ஸ், டி-சர்ட் போடக்கூடாது... அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகின்றன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த கவுன்சலிங்கில் தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரியில் 498 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் என மொத்தம் 2,606 இடங்கள் நிரப்பப்பட்டன. மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை பெற்றுள்ளனர்.

செப்டம்பர் 1 முதல்

செப்டம்பர் 1 முதல்

இதையடுத்து கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கடந்த வாரம் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளன.

ஆடைகளுக்கு கட்டுப்பாடு

ஆடைகளுக்கு கட்டுப்பாடு

மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வரும் முதலாண்டு மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ.) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோருக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

ஜீன்ஸ், டி-சர்ட்க்கு தடை

ஜீன்ஸ், டி-சர்ட்க்கு தடை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போன்ற ஆடைகளை அணியக் கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னல் போட்ட தலைமுடி

பின்னல் போட்ட தலைமுடி

மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலைமுடியை விரித்து விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும்.

மாணவர்களுக்கு உத்தரவு

மாணவர்களுக்கு உத்தரவு

அதேபோல மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வருபவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆடைகளில் கண்ணியம்

ஆடைகளில் கண்ணியம்

டாக்டருக்கு படிக்க வருபவர்கள் கண்ணியமாக தோற்றம் அளிக்க வேண்டும். அதனால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாணவர்கள் வரவேற்பு

மாணவர்கள் வரவேற்பு

மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் என்றால் சமுதாயத்தில் ஒரு மரியாதை உள்ளது. அதனை காப்பாற்றவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

English summary
All government medical colleges are scheduled to start of 1st September for the first year students. Medical College Directorate officials informed that wearing jeans & T-shirts is banned for both boys & girls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X