தலை கீழாக கவிழ்ந்து விழுந்த லாரிகள்.. தொப்பூர் கணவாயில் மீண்டும் விபத்து.. போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி: தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, அடுத்தடுத்து நான்கு வாகனகங்கள் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். இதனால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதி தான் 'தொப்பூர் கணவாய்'. இந்த சாலை சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் என்னும் கிராமத்தின் அருகே உள்ளது.

தர்மபுரியில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த தொப்பூர் கணவாய் அமைந்துள்ளது . சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தை இணைக்கும் மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை மலைகளும் காடுகளும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
தொப்பூர் கணவாய் சாலை நான்கு வழிச்சாலையாக இருந்த போது, மலைசரிவான சாலை என்பதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் வாகனங்கள் அடிக்கடி சிக்குகின்றன. இங்கு கிட்டத்தட்ட 100ம் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலரும் காயம் அடைந்துள்ளனர்.
தொப்பூர் கணவாயை பொறுத்தவரை 3.5 கிலோமீட்டர் கணவாய் முற்றிலும் மலைப்பகுதி என்பதால் அபாயகரமான வளைவுகள் அதிகமாக உள்ள சாலை. எனவே எப்படி மலைப்பகுதியில் வாகனத்தை இரண்டாவது கியரில் செல்கிறோமோ அப்படித்தான் இந்த சாலையில் செல்ல வேண்டும்.
தொப்பூர் கணவாய் சாலை மேடு பள்ளமாகவும், வளைவுகள் மோசமாகவும் மலைப்பாங்காகவும் இருக்கிறது. மற்ற சாலைகளைப் போல் இந்த சாலையில் அதிவேகத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம் . அதனால் வாகனத்தை கட்டுப்படுத்த தவறும் லாரி ஓட்டுநர்கள் முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிவிடுகிறார்கள். அல்லது கட்டுப்படுத்த தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழக்கிறார்கள். இது அடிக்கடி நடக்கிறது.
தொப்பூர் கணவாயில் விபத்தை குறைக்க தடுப்பு சுவர் அமைப்பது, எச்சரிக்கை விஷயங்கள் செய்வது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் போது விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் குறிஞ்சி நகர் சுங்கசாவடியில் ஒலிப்பெருக்கியில் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும் என்றும் அபாயகரமான மலை சாலை உள்ளது என்று எச்சரிக்கப்படும். இதனால் முன்பைவிட விபத்து குறைந்துள்ளது. ஆனால் முற்றிலும் விபத்துகள் குறையவில்லை. அவ்வப்போது தொப்பூரில் விபத்துகள் நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் சங்கிலி தொடர் விபத்து நடந்தது. கடந்த ஜூன் மாதமும் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, அடுத்தடுத்து நான்கு லாரிகள் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். 4 லாரிகள் ஒட்டுமொத்தமாக கவிழ்ந்து விழுந்து கிடந்ததால் தொப்பூர் கணவாய் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விஜயகாந்த் கோரிக்கை : பெரும்பாலும் தொப்பூர் கணவாய் விபத்துக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக உள்ளது. ஒருவர் விபத்தில் சிக்கினால் பின்னால் வருபவர்கள் அப்படியே அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்குகிறார்கள். இந்த பிரச்சனைக்கு உயர்மட்ட பாலம் அமைத்தால் தீர்வு காண முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கையும் வைத்துள்ளார். அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications