கஞ்சா கருப்பு, ஓவியா இடையே பெரும் வாக்குவாதம்.. பிக்பாசில் பரபரப்பு !
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்புக்கும், நடிகை ஓவியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது போன்ற காட்சியை ஒளிபரப்பியது விஜய் டிவி.
பிக்பாஸ் நிகழ்ச்சின் 3ம் நாள் நிகழ்வு நேற்றிரவு இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத காட்சியுடன் நேற்றைய நிகழ்வு காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சண்டை, சச்சரவு, முதல் காதல் அனுபவம் மற்றும் பிக்பாஸ் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்து என களைகட்டியது.

தங்களின் முதல் காதல் குறித்து ஆரவ், கஞ்சா கருப்பு பகிர்ந்து கொண்டனர். கல்யாணம் காட்சி என்று எதுவும் இல்லாமல் இருந்த என்னை இயக்குநர் பாலா அழைத்து பிதாமகனில் நடிக்க வைத்தார் என கஞ்சா கருப்பு கூறினார். தான் படிக்காததால் ஒரு டாக்டரை தான் கல்யாணம் செய்வேன் என்று இருந்த கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணையே முதலில் காதலித்து அவரையே கல்யாணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
இறுதியில் புரேமோ காட்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் கஞ்சா கருப்பு, நடிகை ஓவியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் இருந்தது. ஏதோ டீமுக்குள் பேசுவது போல் அந்த காட்சி காண்பிக்கப்படுகிறது. அப்போது ஓவியா ஏதோ கூற, கடுப்பான கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசுவது போல் உள்ளது. ஏற்கனவே வையாபுரி தேம்பி தேம்பி அழுவது போன்ற காட்சிகளை காட்டி உசுப்பேத்தினர். ஆனால் அதில் ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். தற்போது கஞ்சா கருப்பு, ஓவியா வாக்குவாதம் என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications