ஆர்.கே. நகரில் பணத்தை நம்பாமல் களமிறங்கும் திமுக... ஸ்டாலினுக்கு ஆசிட் டெஸ்ட்
ஆர்.கே. நகரில் முதல் முறையாக பணத்தை நம்பாமல் தனது பலம், கூட்டணி கட்சியினரின் பலத்தை நம்பியை திமுக களம் காண்கிறது. இது ஸ்டாலினுக்கு ஆசிட் டெஸ்ட்தான்.
Recommended Video

சென்னை: இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்பது போல தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் கட்சியின் பலம் கூட்டணி கட்சியினரின் பலத்தை நம்பி களம் காண்கிறது திமுக. கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலினுக்கு இது ஆசிட் டெஸ்ட் ஆகவே அமைந்துள்ளது.
ஆர்.கே. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. மக்களும் வஞ்சனையில்லாமல் அலை அலையாக திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர்.
ஆர்.கே. நகரில் திமுக, அதிமுக, டிடிவி தினகரன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கூடிய கூட்டமெல்லாம் வாக்காக மாற வேண்டும் என்று 3 வேட்பாளர்களுமே தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கின்றனர்.

எப்படியும் கொடுப்போம்
ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் சிறை என்று தேர்தல் ஆணையம் எச்சரித்தும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பலரும் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். குக்கர் விசிலடிக்கும் என்று தினகரன் கூறினாலும் இலை எப்படியும் துளிர்க்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மதுசூதனன்.

கரன்சி பலம்
ஆளும் கட்சியினர் தங்களின் பலத்தை நம்பிக்கையிருக்கின்றனர். முடக்கப்பட்ட இரட்டை இலையை திரும்ப
பெற்றது ஒரு பலம் என்றாலும் மதுசூதனன் தனது பலத்தை நம்பியிருக்கிறார். கூடவே கரன்சி பலமும் இணைந்துள்ளது.

கூட்டணி பலத்தை நம்பும் திமுக
திமுக இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக என கூட்டணி கட்சியினர் பலத்துடன் ஆர்.கே. நகரில் களமிறங்கியுள்ளது. இந்த பலம் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் செயல்தலைவர் ஸ்டாலின்.

ஒரு ரூபாய் கூட தரவில்லை
வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ், நாங்கள் ஒரு ரூபாய் கூட யாருக்கும் தரவில்லை. எங்களுக்கு பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று கூறியுள்ளார் மருதுகணேஷ். ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அடியை வாக்காளர்கள் தருவார்கள் என்றும் கூறியுள்ளார் மருதுகணேஷ்.

செயல்தலைவர் ஸ்டாலின்
திமுக செயல்தலைவராக பதவியேற்ற பின்னர் ஸ்டாலின் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஜெயலலிதா இல்லாத இந்த சூழ்நிலையல் கூட்டணி கட்சியினரை அரவணைத்து தேர்தலை சந்திக்கிறார். இந்த இடைத்தேர்தல் ஸ்டாலினுக்கு ஆசிட் டெஸ்ட்தான். பணபலத்தை நம்ப வேண்டாம் என்று கூறிய ஸ்டாலின், ஆர்.கே. நகரில் வாக்காளர்களை பணத்தால் விலைக்கு வாங்க வேண்டாம் என்று கூறியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர்கள் விரல் சூரியனை அழுத்துமா?
ஜெயலலிதா இருந்த போதே அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 50 ஆயிரம் வாக்குகள் வரை வாங்கினார். இம்முறை கூட்டணி கட்சியினரின் பலம் வேறு இருப்பதால் மண்ணின் மைந்தர் மருதுகணேஷ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றே நம்பிக்கையோடு கூறியுள்ளாராம் ஸ்டாலின். வாக்காளர்களின் விரல் சூரியனை அழுத்துமா பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications