For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடி ரெய்டுகளால் அதிர்ச்சியில் அதிமுக.. பழி வாங்குகிறதா பாஜக?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைக்க ஜெயலலிதா சம்மதிக்கவில்லை என்பதற்காக அக்கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வேலையில் பாஜக தலைமை இறங்கியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுடன் எப்படியும் கூட்டணி சேர்ந்து விட வேண்டும் என, பிரதமர் மோடி முதல் அமித் ஷா வரையில் பாஜக சார்பில் ரகசியமாக முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்த ஜெயலலிதா பாஜகவோடு வெற்றியை பங்கிட விரும்பவில்லை. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், தனித்தே போட்டியிட்டார் ஜெயலலிதா.

நேரில் சந்தித்த மோடி

நேரில் சந்தித்த மோடி

இருப்பினும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார்.

ஜெயலலிதா ஆசை

ஜெயலலிதா ஆசை

இருப்பினும் பாஜகவோடு சட்டசபை தேர்தல் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தயாராகவேயில்லை. இரு கட்சிகளின் கொள்கைகள் நிறைய ஒத்துப்போகும் என்றபோதிலும், அனைத்து தொகுதிகளிலுமே இரட்டை இலை சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்ற அதிமுகவின் ஆசையால் கூட்டணிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.

விரைந்து வந்த மோடி

விரைந்து வந்த மோடி

கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டபோது, முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே இருக்க, பிரதமர் மோடி தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

சொல்லவேயில்ல

சொல்லவேயில்ல

முதல்வருக்கு தகவல் கூறாமல் பிரதமர் வருகை தந்தார். தகவலை அறிந்ததும், அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. அப்போதே இரு தரப்பு கசப்பும் அதிகரித்தது.

அதுவும் போச்சு

அதுவும் போச்சு

அதிமுக கைவிட்டதால் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணியை உறுதி செய்ய பாஜக முயன்றது. அதுவும் முடியவில்லை. அரசனை நம்பி புருசனையும் கைவிட்ட கதையாக பாஜக நிலைமை மாறியது.

கோபம்

கோபம்

மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது தலைமைக்கு கோபத்தை உருவாக்கியது.

அட்டாக் ஆரம்பம்

அட்டாக் ஆரம்பம்

இதையடுத்து அதிமுக எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது பாஜக. ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என, மத்திய அமைச்சர்கள் வரிசையாக வசை பாடினர். ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, அவரின் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி தரப்பட்டது. இதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

இதில் முக்கியமாக வருமான வரித்துறை, அதிமுக பிரமுகர்களுக்கு எதிராக முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளும் இணைந்தே ரெய்டு நடத்த களத்தில் இறங்கியுள்ளனர்.

அதிரடி

அதிரடி

தமிழக தேர்தல் ஆணையர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் வந்ததால், தனது கையிலுள்ள வருமான வரித்துறையை அதிமுகவுக்கு எதிராக களமாட செய்துள்ளது பாஜக, என்கிறார்கள்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

இம்மாதத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் 125 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.

கையில் விவரம்

கையில் விவரம்

இவர்களுக்கு மத்திய உளவுத்துறை, பணம் பதுக்கல் பேர்வழிகளைப்பற்றிய ரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்புகிறது. மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவர் வர்மா ஐ.பி.எஸ். தமிழகத்தில் முக்கியத் துறைகளைக் கவனித்த அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள், முதல்வரின் தோழி சசிகலாவின் உறவினர்கள் யார் யார், அவர்களின் பினாமிகள் யார்? எங்கெங்கே பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? என்கிற அனைத்து விவரங்களையும் கையில் வைத்துள்ளாராம்.

உளவுத்துறை உஷார்

உளவுத்துறை உஷார்

இந்த வகையில்தான், தமிழகத்திலேயே நிறைய பேருக்கு தெரிந்திராத கரூரில் அன்புநாதன் என்பவரின் குடோனில் ஐந்து கோடியை பறிமுதல் செய்தனர். இவரின் பின்னணியில் தமிழக அமைச்சர் ஒருவர் இருந்ததை வெளியே அம்பலப்படுத்தினர். தமிழக காவல்துறை மறைக்க பார்த்தும் ஊடகங்களுக்கு அன்புநாதன் பற்றிய தகவல் வெளியாக மத்திய உளவுத்துறைதான் காரணமாம்.

சசிகலா உறவினர்

சசிகலா உறவினர்

இதேபோஸ எழும்பூரில் விஜயகுமார் என்பவரின் அபார்ட்மெண்டில் ஐந்து கோடி பிடிபட்டது. இவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு நெருங்கிய உறவினர். இப்படி யார் யார் உறவினர் எங்கு உள்ளனர், அவர்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்ற தகவல்களை மத்திய உளவுத்துறை விரல் நுனியில் வைத்துள்ளது.

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்

மத்திய அரசின் கோபத்தை தாங்க முடியாமல் திணறிக்கொண்டுள்ளது அதிமுக. தங்களால் வெற்றி பெற முடியுமோ முடியாதோ, பணத்தால் வெற்றி பெறலாம் என்று நினைத்து தங்களை புறக்கணித்த அதிமுகவை ஜெயிக்க விடக்கூடாது. பணத்தை முடக்கிவிட வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் திட்டமாம்.

பொறுமல்

பொறுமல்

இந்த கட்டளைகளை பிறப்பித்து, செக் வைத்துள்ளது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா என்று பொறுமுகிறார்கள் அதிமுகவினர். பணம் கொடுப்பதை தடுப்பதில் மத்திய அரசு அக்கறை காட்டுவது பாராட்டுக்குறியது என்றபோதிலும், திமுகவினரிடம் இந்த கெடுபிடியை வருமான வரித்துறை காட்டவில்லை என்பதை ர.ர.க்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

தீர்ப்புக்கு பின்

தீர்ப்புக்கு பின்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தேர்தல் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக போகும்பட்சத்தில், அதிமுகவை தேர்தல் களத்தில் இருந்து அடித்து வீழ்த்த பாஜக முழு வீச்சில் தயாராகியுள்ளது.

English summary
BJP chief is behind the raids which are conducted in AIADMK men places?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X