திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது.. போலீஸ் அதிரடி!
திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத். திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி துணை அமைப்பாளராக வினோத் உள்ளார். இவர் கடந்த 2014 -ம் ஆண்டு ஆலங்காயம் பகுதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வினோத் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வினோத் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதனும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது எனக்கு எதிராகவே சாட்சி சொல்ல வருகிறாயா? என நீதிமன்ற வளாகத்தில் வைத்தே எஸ்.ஐ ஜெகநாதனுக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.ஐ ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி வினோத்தை தேடிவந்தனர். இந்த நிலையில், ஆலயங்காயத்தில் வைத்து வினோத்தை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் வருமாறு:- இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காற்றாலை பண்ணையின் பொது மேலாளரான பிரேசில் நாட்டை சேர்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாரோஸ் என்பவரை, ஒப்பந்த பணிகளை எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்லஸ் ஹெபார்ட் பணகுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜி மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் உள்ளிட்டோர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications