காட்டெருமை விரட்ட.. குதிரை சவாரி செய்ய.. கொட்டடித்து ஆட்டம் போட.. கொடைக்கானலை அதிரவைத்த அண்ணாமலை!
கொடைக்கானல்: தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களை சந்தித்தார்.
என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபயணத்தை நேற்று கொடைக்கானலில் இருந்து தொடங்கினார் அண்ணாமலை.

பழனி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று அண்ணாமலையின் யாத்திரை நடைபெற்றது. கொடைக்கானல் நாயுடுபுரத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. கொடைக்கானல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை பிரசாரம் செய்து வந்தார்.
காட்டெருமை: கொடைக்கானல் நகரின் பிரதான வீதிகளில் அண்ணாமலை மக்களை சந்தித்தபடியே பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது ஒரு இடத்தில் திடீரென காட்டு எருமை, பாதயாத்திரை கூட்டத்துக்குள் நுழைந்தது. இதனால் பாஜகவினர் சிதறி ஓடினர். இதையடுத்து காட்டெருமை குறித்த அறிவிப்புடன் பாதயாத்திரை தொடர்ந்தது.
குதிரை சவாரி, ஆட்டம்: பின்னர் பாஜக நிர்வாகி ஒருவர் தமது குதிரையை கொடுத்து அதில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய கேட்டுக் கொண்டார். இதனை அண்ணாமலை ஏற்று குதிரை மீது ஏறி அமர்ந்து நிர்வாகியின் ஆசையை நிறைவேற்றினார். இரவில் பழங்குடி மக்களுடன் இணைந்து ஆட்டம், பாட்டு என ஆடியும் பாடியும் மகிழ்ந்தார் அண்ணாமலை.
வாக்குறுதி நிறைவேற்றவில்லை: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பொதுமக்களிடையே பேசிய அண்ணாமலை, இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மொத்தம் 9 வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
கொடைக்கானல் யாத்திரையை நிறைவு செய்த பின்னர் நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதிகளில் அண்ணாமலை பயணிக்கிறார். அதன் பின்னர் நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறது.
Son of Soil Thalaivar @annamalai_k with local villagers of Vilpatti, Kodaikanal.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) September 12, 2023
Our Culture. Our Pride.
Sanathana Dharma🔥
The entire village assembled to see Thalaivar. pic.twitter.com/Z7KP1ZJls6
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications