கோவில்களை மூடும் அதிகாரிகளை பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன்... எச்.ராஜா மிரட்டல்!
ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில்களை மூடும் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க என்னால் முடியும்..கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்ளிடம் கூறியதாவது: சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை மூடி அதன் மீது கட்டப்பட்டது. சட்டத்திற்கும் நியமனங்களுக்கும் இங்கே மரியாதை கிடையாது.

ஒருவேலையும் நடக்கவில்லை
சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வீட்டுக்கு ரூ5,000 வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள், கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ25,000 தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை.

கோவிலில் கொள்ளை?
கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஹனிமூன் செல்வது மாதிரி அறுபது நாள் மோகம் முப்பது நாளில் முடிந்து போய்விடும். மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். திமுக அரசு கோவிலில் கொள்ளை அடிக்க கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ...கோவில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு மிரட்டல்
அறநிலையத்துறை அசுரக் கூட்டம், அரக்கர்கள் கூட்டம் கோயில்களை பூட்டுவதற்கு முயற்சிக்கின்றன. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் உள்ளது? கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? கோவில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது. கோவிலில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் வேண்டுமானால் போடட்டும். அதை சந்திக்க தயார்.

ஜெய்பீம் மகாலட்சுமி காலண்டர்
திமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது. உதாரணம் கொளத்தூர் தொகுதியில் மக்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவிலில் கொள்ளை அடிக்கிற திட்டம் தமிழக அரசால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் கேவலமாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications