அதிமுகவில் இணைந்தார் பாஜக வெள்ளையம்மாள் - நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலிலிருந்து விலகியவர்
சென்னை: பாஜக சார்பில் நெல்லை மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்து பின்னர் கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு ஆதரவாக வாபஸ் பெற்று பரபரப்பை ஏற்படுத்திய வெள்ளையம்மாள் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவர் நெல்லை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் இவருக்கு அதிமுக தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆசியும் பெற்றார் வெள்ளையம்மாள். இந்தப் பின்னணியில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் தனது கைக்குழந்தை, கணவருடன் போய் அதிரடியாக வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார் வெள்ளையம்மாள்.
இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு போட்டி இல்லாத நிலை ஏற்பட்டு அவரும் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளையம்மாளின் செயலால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. வெள்ளையம்மாளை அதிமுகவினர் மிரட்டி வாபஸ் பெற வைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் வெள்ளையம்மாள் தரப்பிலிருந்து வாயே திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளையம்மாள் தனது கணவர் கணேச பெருமாள்ராஜாவுடன் சேர்ந்து சந்தித்து கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார்.
இதேபோல மேலும் பல கட்சிகளைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் இன்று முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இரண்டறக் கலந்தனர்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications