பாஜகவில் மார்ச் 4ல் விருப்ப மனு வாங்குறாங்க... மார்ச் 14,15ல் நேர்காணலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 4, 5ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 13, 14ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார் நிலையில் உள்ளது. மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு மக்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தமிழகத்தில் எதிரொலிக்கும். இதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு, விருப்பமனு மார்ச் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. மார்ச்13 மற்றும் 14 தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.
மார்ச் மாதம் தமிழகத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிறார். மார்ச் முதல் தேதி கமலாலயத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெறும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் களம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், தமாகா என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட விருப்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் நேர்காணலை நடத்தி வருகின்றன. பாமக வேட்பாளர் பட்டியலையே தயாராக வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக இப்போது விருப்பமனு பெற உள்ளது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னரே நேர்காணலை தொடங்க உள்ளது பாஜக.
சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக விஜயகாந்த் முடிவினை எதிர்பார்த்து பாஜக காத்துக்கொண்டுள்ளது. கூட்டணி முடிவாகும் பட்சத்தில் தொகுதி பங்கீடு முடிந்த பின்னர் அந்த தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனு பெறலாம் என்று நினைத்தார்களோ என்னவோ? விஜயகாந்த் பிடி கொடுக்காத காரணத்தால் தற்போது 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications