ஆளுநருக்கு எதிராய் வரிந்து கட்டும் கட்சிகள்! ஒற்றை துணையாய் நிற்கும் பாஜக! பரபர தருமபுரம் ஆதினம்..!
மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் நடத்தும் ஞானரத யாத்திரையை துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநரை பல்லாயிரக்கணக்கானோரை கொண்டு வரவேற்போம் என பாஜக துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது.
Recommended Video
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகிற 19ஆம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார்.
இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆளுநருக்கு எதிர்ப்பு
இந்த சூழலில் இது தொடர்பாக, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது, இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம்.

பாஜக ஆதரவு
ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம். தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கான மசோதாவை கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பிரம்மாண்ட வரவேற்பு
நீட் தேர்வு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிற்கு மாற்று கருத்து கிடையாது. தமிழக மாணவர்களை இந்தி படிக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் தமிழக பாரதிய ஜனதா கட்சியை அதனை எதிர்த்து போராடும் என்றார்.

கருப்பு முருகானந்தம் பேட்டி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை வருகைக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்களை கொண்டு வந்து வரவேற்போம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறி இருப்பது மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications