தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம்... சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் அடிக்கடி தேர்தல் வருவது மக்களுக்கு நன்மை தராது என்றார்.

மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றுதான் பாஜக விரும்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் ஆட்சி கவிழும் என்ற அச்சம் தற்போதைய அரசுக்கு உள்ளது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் மாட்டிறைச்சிக்கு தடை என்று சொல்வது தவறு. இது கால்நடை விற்பனையை ஒழுங்குப்படுத்தும் முறை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications