ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை பா.ஜ.க. வும் புறக்கணிக்கிறது?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து டெல்லியில் நாளை மறுநாள் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூடி முடிவு செய்து அறிகிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன.

அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று தகவல் வெளியானாலும், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு கிட்டத்தட்ட காங்கிரசும் வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிக்க பா.ஜ.க,வும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.க, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பவில்லை விஜயகாந்த் கூறியதாக தகவல் கசிந்தது.
பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இந்த முடிவே எடுக்கப்பட்டதாக விஜயகாந்திடம் தமிழிசை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க, மூத்த தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்த பிறகு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க, தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications