தஞ்சை.. கர்நாடகா வங்கி அலுவலகத்தில் தார் பூசி தமிழ் தேசியக் கட்சியினர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடகத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் இயங்கி வரும் கர்நாடகா வங்கி அலுவலகத்திற்கு தார் பூசும் போராட்டம் நடைபெற்றது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்துவரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகமே போர்களமாகி உள்ளது.

  Black paints thrown on Karnataka Bank at Tanjore

  சென்னையை அடுத்த திருவிடந்தை ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள மோடியை எதிர்த்து சென்னை மட்டுமில்லாது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் கர்நாடக அரசை எதிர்த்து தஞ்சையில் உள்ள கர்நாடகா வங்கி அலுவலகத்தில் தார் பூசும் போராட்டம் நடைபெற்றது.

  இதில், கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு பெயர் பலகை மற்றும் கதவுகளில் தார் அடித்து போராட்டத்தில் தமிழ் தேசியக் கட்சியினர் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Black paints thrown on Karnataka Bank at Tanjore. Cauvery Management Board issue protest over Tamilnadu going Vigor and Black Flag shown to Modi today at Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற