சுவாதி வழக்கில் இன்னும் பல கொலைகள் தொடரும்.... திகில் கிளப்பும் தமிழச்சி
சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல 'கொலைகள்' தொடரும் என்று பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு பீதியை கிளப்பியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார் தமிழச்சி. சுவாதி கொலை வழக்கில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்றும் தமிழச்சி தம்முடைய பதிவுகளில் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ராம்குமார் மர்ம மரணம் குறித்து தமிழச்சி எழுதியுள்ளதாவது:
சுவாதி படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வீடியோவில் பதிவான ஒரு மர்ம நபர் குறித்த காட்சியை பத்திரிகைகள் வெளியிட்டன. அதற்கு பிறகே இன்னொரு வீடியோவில் ராம்குமார் நடந்து செல்வதாக கூறி மற்றொரு வீடியோ காட்சி காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது.
முதலில் காட்டிய மர்ம நபர் யார்? அவரை குறித்து தமிழக காவல்துறை ஏன் விசாரணை நடத்தவில்லை? என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை.
இரண்டு காட்சியில் இருப்பவர்களும் ராம்குமார் தான் என்று மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், முதல் காட்சியில் உள்ள மர்ம நபரை காப்பாற்றத்தான் அரசு அதிகார அமைப்புகள் ராம்குமாரை குற்றவாளியாக்க முற்பட்டது.
காவல்துறை வெளியிட்ட முதல் படத்தில் இருப்பவர் பெயர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி.
"தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர்-இல் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம்.
சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு.
இச்செய்தியை நான் ஏன் பதிவு செய்யவில்லை என்றால் இத்தகவல் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லது கருப்பானந்தம் கூலிப்படைகள் அவரையும் கொன்றுவிடக் கூடும். இல்லாவிட்டால் மீண்டும் இவர் தலைமறைவாகி விடுவார் என்று கவனமாக இருந்தேன்.
நாளை 19 செப்டம்பர் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் ராம்குமார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகே சுவாதி படுகொலை தொடர்பான நபர்கள் குறித்து பேச நினைத்திருந்தேன். ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். படுகொலைக்கு தொடர்பற்ற அவரே படுகொலை செய்யப்பட்டு விட்டார்.
முத்தூர் வாசிகளே!
உங்கள் ஊரைச் சேர்ந்த மணி இன்னும் சில மணி நேரங்களில் கொல்லப்படலாம். ஆனால் அது தற்கொலை என்றே சொல்லப்படும். அல்லது மணி தலைமறைவாகலாம். 2 மாதத்திற்கு பிறகு வந்தவன் 2 வருடங்களுக்கு பிறகு வரலாம். அல்லது வராமலேயே போகலாம். ஏனென்றால் சேர்ந்த இடம் அப்படி.
இவ்வாறு தமிழச்சி பதிவு செய்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications