சென்னை: ப்ளூவேல் விளையாடிய ஒடிசா மாநில இளைஞர் தற்கொலை முயற்சி
சென்னை பொழிச்சலூரில் ப்ளுவேல் விளையாடிய ஓடிசா மாநில இளைஞர் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் புளூவேல் விளையாடிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொழிச்சலூரில் வசித்து வந்தவர் பிரசாத்,21 ஓடிசாவை சேர்ந்த இவர் இன்று காலையில் தனது கையையும், நாக்கையும் அறுத்துக்கொண்ட நிலையில் படுக்கை அறையில் கிடந்தார் அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இளைஞர்களும் சிறுவர்களும் ஆன்லைனில் ப்ளூவேல் என்றவிளையாட்டை விளையாடி வருகின்றனர். அந்த விளையாட்டு தற்கொலையை ஒரு 'டாஸ்க்'-ஆக செய்யும் விபரீத விளையாட்டாகும். ஏராளமானோர் இந்த விளையாட்டிற்கு பலியாகியுள்ளனர்.

ஆபத்தான் ப்ளுவேல்
இந்த விளையாட்டை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய் என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.

தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டு
இந்தியாவில் இந்த விளையாட்டை விளையாடிய சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மதுரை திருமங்கலத்தில் மாணவன் விக்கி, புதுச்சேரி எம்பிஏ மாணவன் சசிகுமார் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள், சிறுவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பலியாகும் இளைஞர்கள்
கடந்த அக்டோபர் மாதம் பொன்னேரி அருகே ப்ளூவேல் விளையாடியதால் இளைஞர் தினேஷ், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக ப்ளூவேல் இணையதள விளையாட்டு பற்றி சற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ப்ளூவேல் விளையாடிய பிரசாத் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி மருத்துவமனை
ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் பிரசாத் தனது கையை அறுத்துக்கொண்டும், நாக்கை துண்டித்துக்கொண்டும் தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரசாத்தை மீட்ட நண்பர்கள், அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications