என்னா வெயிலு! பாப்கட்டுடன் நீச்சல் குளத்தில் முங்கி எழுந்த செங்கமலம்! மேடம் 3 வேளை குளிக்கிறாங்களாம்
சென்னை: என்னா வெயிலு என்னா வெயிலு... நீச்சல் குளத்தில் தலையை முக்கி எழுந்திருக்கும் பாப்கட் செங்கமலம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமல் என்ற பெண் யானை உள்ளது. இதற்கு 34 வயதாகிறது.
இந்த யானைக்கு அதன் பாகன் பாப் கட் செய்துள்ளார். அதனால் அதன் பெயர் பாப்கட் செங்கமலம் என அழைக்கப்படுகிறது. எந்த யானைக்கும் இல்லாத வகையில் செங்கமலத்திற்கு தலையில் அதிக முடி வளர்ந்தது.

அதைத்தான் பாப் கட்டாக அந்த பாகன் வெட்டி விட்டார். இதன் ஹேர் ஸ்டைலை பார்க்கவே தினமும் பக்தர்கள் கூட்டம் வருவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதன் ரசிகர்களாகிவிட்டனர். இந்த யானை அந்த கோயிலில் நடைபெறும் எல்லா விசேஷங்களிலும் பாகன் ராஜகோபாலின் வழிகாட்டுதல்படி கோயிலை வலம் வரும்.
பாகன் சொல் பேச்சை தட்டாத குட் கேர்ள் செங்கமலம். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவர். இரண்டு வேளைகளிலும் யானை குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் ரூ 75 ஆயிரம் செலவில் ஷவர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் ஒன்றை கட்டித் தர வேண்டும் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ 10 லட்சம் செலவில் செங்கமலம் குளிக்க நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தன.
இந்த யானை நீச்சல் குளத்தில் குளிக்கத் தொடங்கியது. தற்போது கோடை காலம் என்பதால் செங்கமலம் 3 வேளையும் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுகிறது. ஹாயாக நீச்சல் குளத்திற்கு வரும் செங்கமலம் தண்ணீரை பார்த்ததும் தலையை மூழ்கி எழுந்தது. அது போல் தும்பிக்கையால் தண்ணீரை பிய்ச்சி அடித்துக் கொண்டது.. இது போதாக்குறைக்கு அந்தம்மாவுக்கு நீச்சல் குள மதில் சுவர் ஏறி ஒருவர் பைப் மூலம் தண்ணீர் பிய்ச்சி அடித்தார்.

ஜில் ஜில் கூல் கூல்.. ஐ யாம் வெரி ஹேப்பி என்பதை போல் தண்ணீரை விட்டு வெளியே வர மனமில்லாமல் திருப்தியாக குளித்து முடித்தது. எப்போது யானை நடக்கும் போது அந்த பாப் கட் அழகாக அசைவிற்கேற்ப ஆடும். ஆனால் தண்ணீரில் நனைந்தவுடன் மண்டையுடன் அந்த முடியும் அப்படியே ஒட்டி கொண்டது. இந்த யானை கடந்த 2003 ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த யானை அனைவருடனும் நன்றாக பழகும் என்பதால் இதை பாகன் கட்டி வைப்பதில்லை. மேடம் 3 முறை தலைக்கு குளிப்பது வழக்கம். தலையை துவட்டி சீப்பால் வாரி விடுவார் பாகன். தலைக்கு குளித்துவிட்டு தலைமுடி காய்ந்து காற்றில் பறக்கும் போது அப்பப்பா செங்கமலம் சூப்பராக இருக்கும். கண்ணு பட்டுட போகுது திருஷ்டி சுத்தி போடுங்க என பாகனிடம் பக்தர்கள் சிலர் சொல்லிவிட்டு செல்வர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications